திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்பு பகுதியில் மதுவிற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், காவல் நிலையத்திற்கு பூச்சி மருந்து பாட்டிலுடன் சென்ற பெண்களால் சலசலப்பு ஏற்பட்டது. ஓபசமுத்திரம் பகுதியில் 24 மணி நேரமும் மதுவிற்பனை செய்வதாகவும், இதனை தடுக்க கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.