திருவாரூர் அருகே கார் மூலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். நாரணமங்களம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த ஹோண்டா சிட்டி காரை நிறுத்தி சோதனை செய்த போது மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.