குயிலாப்பாளையம் பகுதியில் உள்ள நீக்ரோசன் உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவில் 51 வது பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த 23 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.