சென்னை பிராட்வேயில் தங்க நகைகளை திருடிய வீட்டு வேலைக்கார பெண் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் 35 கிராம் தங்க நகைகள் மற்றும் 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை வீட்டின் உரிமையாளர் சரி பார்த்தபோது சுமார் 222 கிராம் நகைகள் திருடு போனது தெரியவந்தது.