ராமநாதபுரம் அருகே வீட்டு வேலைக்கு சென்றபோது 22 சவரன் நகைகளை திருடிய 2 பெண்கள், அந்த திருட்டில் இருந்து தப்பிக்க வீட்டின் உரிமையாளர் மீது பாலியல் புகாரை கூறி தப்பித்த நிலையில், ரீல்ஸ் வீடியோ மூலம் தாங்களாகவே சிக்கி உள்ளனர்.திருடிய நகைகளை அடகு வைத்து கார், பைக், கேமரா வாங்கிக் கொண்டு குளுகுளு கொடைக்கானலுக்கு ஜாலி டரிப் செய்த பெண்களையும், அந்த பெண்களுக்கு கேமராமேனாக இருந்த இளைஞரையும் போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.பார்க்க அப்பாவிபோல் இருக்கும் இளம்பெண், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்ததோடு, அந்த ரெண்டகத்தை மறைக்க இன்னொரு இழிபழியை தூக்கி போட்டு நேக்காக தப்பித்தார். ஆனால், பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல, சில மாதங்களில் தானாகவே சிக்கி உள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது கருணை. இவரது வீட்டில் அலிமத்து நிஸ்மியா என்ற இளம்பெண் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். பணிக்கு சென்ற சில வாரங்களிலேயே முகமது கருணை வீட்டில் என்னென்ன பொருட்கள் எங்கு உள்ளது? நகைகள் எந்த பீரோவில் உள்ளன? அந்த பீரோவின் சாவிகள் எங்கு இருக்கும்? என அத்தனையையும் விரல்நுனியில் தெரிந்து வைத்திருந்தார் நிஸ்மியா.இதற்கு முன்பு பணிபுரிந்த பல வீடுகளில் கைவரிசை காட்டிய நிஸ்மியா, முகமது கருணை வீட்டிலும், தனது தனித்திறமையை காட்டுவதற்காகவே அத்தனையையும் தெரிந்து வைத்துள்ளார். இந்நிலையில், முகமது கருணையின் வீட்டில் ஏற்கெனவே வேலை பார்த்து வந்த பர்வீன் என்ற பெண்ணிடம் தனது திருட்டு பிளானை சொல்லி அவரையும் கூட்டு சேர்த்துள்ளார் நிஸ்மியா. இதையடுத்து, முகமது கருணையின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஸ்மார்ட்டாக ஆப் செய்துவிட்டு சிறிது சிறிதாக இருவரும் சேர்ந்து 22 சவரன் நகைகளை திருடி உள்ளனர். அடிக்கடி நகைகளை எடுத்து பார்க்காத முகமது கருணையின் மனைவி ஒருநாள் திடீரென பீரோவை திறந்து பார்த்தபோது 22 சவரன் நகைகள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு பர்வீன் மற்றும் நிஸ்மியாவிடம் நகைகள் குறித்து கேட்டுள்ளார்.அதற்கு, இல்லவே இல்லை என இருவரும் சாதித்ததால் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் முகமது கருணை. வழக்குப்பதிவு செய்த போலீசார், பர்வீன் மற்றும் நிஸ்மியாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, முகமது கருணை தங்கள் இருவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனை மூடி மறைக்கவே தங்கள் மீது திருட்டுப்பழி போடுவதாகவும் நிஸ்மியாவும், பர்வீனும் அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.இதைக்கேட்டு ஷாக்கான முகமது கருணை, நகைகள் போனால் போகட்டும், அதற்காக வீண்பழியை சுமக்க முடியாது என விறுவிறுவென வீட்டுக்கு வந்துவிட்டனர். அடுத்து நகைகள் பற்றி கண்டுகொள்ளவும் இல்லை.இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் கழித்து, திருமண விழா ஒன்றில் பங்கேற்ற நிஸ்மியாவும், பர்வீனும், முகமது கருணையின் வீட்டில் திருடிய நகைகளை அணிந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை தனது உறவினர் மூலம் இன்ஸ்டா பக்கத்தில் பார்த்த முகமது கருணை மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று வீடியோவை காட்டி புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த 2 பெண்களையும் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்ததும் நகைகள் திருடியதை இருவருமே ஒப்புக்கொண்டனர். மேலும், திருடிய நகைகளை 3 நகைக்கடைகளில் அடகு வைத்து 2 டியோ பைக், ஒரு ஈகோ கார் மற்றும் விலை உயர்ந்த கேமரா ஒன்றும் வாங்கி உள்ளனர்.திருட்டு நகையை வைத்து வாங்கிய புதிய காரில் குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் என ஜாலியாக ஊர் சுற்றி உள்ளனர். அதோடு, புதிய கேமரா மூலம் அந்த சுற்றுலா தலங்களில் டிசைன் டிசைனாக போஸ் கொடுத்து போட்டோக்களையும் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். நிஸ்மியாவின் கணவர் கௌதம் ராஜ் 2 பெண்களையும் அழைத்துக் கொண்டு ஊர் சுற்றி காண்பித்ததோடு, ரீல்ஸ் வீடியோக்களுக்கு கேமராமேனாகவும் இருந்துள்ளார்.ரீல்ஸ் மோகத்தால் 22 சவரன் நகைகளை திருடி, அதில் இருந்து தப்பிக்க முகமது கருணை மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய நிஸ்மியாவும், பர்வீனும் சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்க, திருட்டு மனைவிக்கு கேமராமேனாக சென்ற கௌதம் ராஜூம் ஜோடியாக, கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.இதையும் பாருங்கள் - படியில் பயணித்த மாணவனுக்கு நொடியில் நேர்ந்த துயரம், அதிர்ச்சி | SivagangaiNews | StudentDeath