கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கர் வரும் 23ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக வேண்டும் என்று வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.