காரைக்காலில், 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அப்துல் அகமது என்ற இளைஞர், பக்கத்து தெருவை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அச்சிறுமியை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.