2025-26ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் நிர்வாகம் மற்றும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகம் உயர்த்தியுள்ளது. 21 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 13 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகவும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு கட்டணம் 24 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 27 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.