கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசின் டேண்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த 3 நாட்களாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தொழிற்சங்க தலைவர் மற்றும் வழக்கறிஞர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.