பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த பெரியம்மாபாளையம் பகுதியில் பூர்வீக சொத்தில் பெயர் சேர்க்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் பணத்தை வாங்கிய போது சிக்கினார்.