ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று அக்டோபர் 18ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2, 000 சரிந்து, ஒரு சவரன் ரூ.95,600க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.250 குறைந்து ஒரு கிராம் ரூ.11,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் ரூ.95,600 (-ரூ.2,000)ஒரு கிராம் ரூ.11,950 (-ரூ.250)சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் நிதி பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். எனவே, கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டில், அதன் விலை தினமும் உச்சத்தை எட்டி வருகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் அக்டோபர் 16ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.11,900, ஒரு சவரன் ரூ.95,200 என்ற உச்சத்தை எட்டியது. வெள்ளி ஒரு கிராம் ரூ.206க்கு விற்கப்பட்டது. நேற்று அக்டோபர் 17ஆம் தேதி, ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு, ரூ.300 உயர்ந்து, ரூ.12,200க்கு விற்பனையானது.ஒரு சவரனுக்கு அதிரடியாக, ரூ.2,400 அதிகரித்து எப்போதும் இல்லாத வகையில், ரூ.97,600 ஆக உயர்ந்தது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு, ரூ.3 குறைந்து நேற்று, ரூ.203க்கு விற்கப்பட்டது.தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.2,000 சரிந்து சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.இந்த மாதம், 1ம் தேதி ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்கப்பட்டது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.10,000 அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு, ரூ.13 குறைந்து, ஒரு கிராம் ரூ.190க்கு விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக வெள்ளி விலையும் உயர்ந்து வந்த நிலையில் இன்று சரிவை கண்டுள்ளது.