திருவாரூர் அருகே தண்ணீர் இல்லாமல் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதாக தெரிவித்த விவசாயிகள் பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கூத்தாநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூவாயிரத்து 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசயிகள் ராமானுஜ மணலி, நாகராஜன் கோட்டகம், சுபத்ரியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் பாசன வசதி இல்லாமல் பயிரிடப்பட்டு 30 நாட்களான பயிர்கள் வீணவதாக தெரிவித்தனர். மேலும் நிலம முழுவதும் வெடித்து பாலம் பாலமாக காட்சி அளிப்பதாகவும், ஆற்றில் இருந்து இன்ஜின் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.