நாகை அருகே தலைஞாயிறு 5ம் சேத்தி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராகவிருந்த 2 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மழை விட்டு மூன்று நாட்களாகியும் இடுப்பளவு தேங்கிய மழைநீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வாய்கால்களை முறையாக தூர்வாராததால் வயலிலேயே மழைநீர் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.இதையும் படியுங்கள் : 5 ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்