ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மேல் புதுப்பாக்கம் பகுதியில் பெய்த கனமழையால், ஏரி நிரம்பி உபரிநீர் விவசாய நிலங்களை சூழ்ந்ததால், அறுவடைக்குத் தயாராக இருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக, விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ஏரி உபரிநீர் செல்ல சரியான வழித்தடங்கள் இல்லாததால், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாகவும், விவசாயம் செய்வதற்கு வங்கியில் பெறப்பட்ட கடன் தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் விரக்தி தெரிவித்தனர். இந்நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இதையும் பாருங்கள் - ஏக்கர் கணக்கில் நெற்பயிர்கள் சேதம்.. பரிதாப காட்சிகள்! | Ranipettai | Paddy Damage