சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஏனாதி கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏனாதி கண்மாயில் நிரம்பிய தண்ணீரை, பாப்பாக்குடி கண்மாய்க்கு திறந்து விடாததால், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.