விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.நரிகுளம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமூதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியபோக்கின் காரணமாக சமூதாய நலக்கூடம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.