சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற அய்யனார் கோயில் பங்குனி திருவிழாவில் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். எஸ்.புதூர் அடுத்த கே.புதுப்பட்டியில் உள்ள அய்யனார் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடைபெற்றது. இதில் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் கண்மாயில் தீர்த்தம் தெளித்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய நிலையில், கரிசல்பட்டியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சீர் வரிசை கொண்டு வந்தனர்.