போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சாணார்பட்டியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவனாண்டி என்பவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.