தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், 34 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை சென்னை தீவுத் திடலில் வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு சுவர் கடிகாரங்களை முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, சொகுசுப் பேருந்துக்குள் சென்று இருக்கைகளின் தரம், ஏசி வசதி குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கொண்டார்.