ராணிப்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆற்காடு அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன், பெரியப்பாவின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.