விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்றதோடு பேருந்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் இருந்து கேளம்பாக்கம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து திண்டிவனம் அய்யன்தோப்பு ரவுண்டானா பகுதியில் சென்றபோது, முன்னே இருசக்கர வாகனத்தில் வழிவிடாமல் சென்ற இளைஞர்களிடம் ஓட்டுநர் வழிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடரந்து இருவரும் பேருந்தை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பேருந்து கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.