சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சியை வெளியிட்ட 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். காரைக்குடி சேர்வார் ஊரணியை சேர்ந்த மனோஜ் கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்த வீடியோவை போலீஸார் கைப்பற்றி அழித்தனர். ஆனால், கொலை நடந்த இடத்தில் இருந்த கடையிலுள்ள சிசிடிவி காட்சி வெளியானதால் ஊழியர்கள் ருபேஷ், ஆதவன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.