தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மதுரையில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், சொந்த ஊரான பெரியசாமிபுரத்திற்கு கோவில் திருவிழாவுக்காக வந்திருந்தனர். திருவிழா முடிந்தபின் அங்குள்ள கடலில் குளித்து கொண்டிருந்தபோது 5 பெண்கள் கடல் அலையில் சிக்கிக் கொண்டனர். இதில், கல்லூரி மாணவியான இலக்கியா மற்றும் கன்னியம்மாள் ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட அனிதா, ஸ்வேதா, முருகலட்சுமி ஆகிய 3 பேருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.