தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நபர் தனது 2 மனைவிகள் மற்றும் மாமியாருடன் நகை பறிப்பில் ஈடுபட்ட நாகப்பன் என்பவரை போலீசார் கும்பலாக கைது செய்தனர். புளியங்குடியில் பேருந்தில் பயணித்த மாரியம்மாள் என்பவரின் 5 பவுன் நகையும், சாய்ராபீவி என்பவரின் 4.5 பவுன் நகையையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேருந்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி இவர்களை நகைகளை திருடியது அம்பலமானது.