கோவையில் இருந்து கேரளாவுக்கு உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தியதாக, மதுக்கரை நகராட்சி தலைவர் மகனுக்கு சொந்தமான 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு- கேரளா எல்லையோரத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 டிப்பர் லாரிகள் பிடிபட்டன. விசாரணையில் அந்த லாரிகள், ஷாருகான் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.