மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரும் திருமுல்லைவாசல் பகுதியில் இருந்து சீர்காழி நோக்கி ஒரே பைக்கில் சென்றனர். விநாயகுடி அருகே வளைவில் திரும்பியபோது எதிரே வந்த சிந்துஜா என்கிற தனியார் பேருந்து மீது மோதியதில் பாலிடெக்னிக் மாணவரான சதீஷ்குமாரும், 12-ம் வகுப்பு மாணவரான சந்தோஷ்குமாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மகேஷ்குமார் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.