தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்த சித்திரவேல், திரவியராஜ் ஆகியோர் தூத்துக்குடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பெட்ரோல் நிரப்புவதற்காக 4 வழிச் சாலையின் குறுக்கே கடந்தபோது, பின்னால் வந்த கார் மோதியது.