திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த 2 பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மதுமோகனுக்கு வலது கையிலும், சரவணனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.