தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வீட்டின் முன்புறம் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். புளியங்குடி அருகே சிந்தாமணி பகுதியை சேர்ந்த கண்ணன், கடந்த 17-ம் தேதி இரவு வீட்டின் முன்புறம் வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றவர், மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது வாகனம் திருடு போயிருப்பதை கண்டு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிந்து அதே பகுதியை சேர்ந்த அசோக், மாரிமுத்து ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, கண்ணனின் வாகனத்தை திருடியது தெரியவந்ததை தொடர்ந்து, இருவரையும் கைது செய்தனர்.