நாமக்கல்லில் தனியார் ஹோட்டல் லிஃப்டில் சிக்கிக் கொண்ட இருவரை காப்பாற்றிய தீயணைப்பு துறையினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. நாமக்கல் - திருச்சி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த ஹரேஸ் என்கிற வடமாநில நபரும், எலெக்ட்ரீசியன் அசோக்குமாரும் 3-ஆவது தளத்தில் இருந்து கீழ் தளத்துக்கு லிஃப்டில் இறங்கியுள்ளனர். ஆனால், லிஃப்ட் திடீரென பழுதாகி நின்று விடவே, உள்ளே சிக்கிக் கொண்ட இருவரும் உதவி கோரி ஹோட்டல் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.