திருநெல்வேலியை சேர்ந்த பிரபல ரவுடி குமுளி ராஜ்குமார் உள்ளிட்ட 2 பேரை திருச்சியில் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்த குமுளி ராஜ்குமார், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.