நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்ளிட்ட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை காணவில்லை என பெற்றோர் தேடியபோது அவர் வீட்டின் அருகிலிருந்த புளிய மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.இதேபோல் மருங்கூரை சேர்ந்த இளஞ்செழியன் என்பவரின் மகள் துர்கா திருவாரூரில் உள்ள திரு.வி.க கல்லூரியில் படித்து வந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்ததால் துர்கா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.