செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடலில் குளித்த 5 இளைஞர்களில் 2 பேர் மாயமான நிலையில், அவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்த க்ரிஷி கேசவ், சையது ரியாஸ் ஆகிய இருவரும் அலையில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், வெண்புருஷம் மற்றும் உய்யாளிக்குப்பம் பகுதிகளில் இருவரது சடலமும் கரை ஒதுங்கியது.