சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடப்பாரையுடன் வந்த இரண்டு மர்மநபர்கள் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வைக்கோல் தொட்டி தெரு பகுதியில் நள்ளிரவில் வந்த இரண்டு நபர்கள் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைக்க முயன்றபோது, அலாரம் அடித்ததால் உடனடியாக அங்கிருந்து தப்பி சாவகாசமாக நடந்து சென்றனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.