துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டீ சர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து புதிதாக தாக்கல் செய்த 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. ஒரே விஷயத்திற்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதிய வழக்குகளை திரும்பப் பெற உத்தரவிட்டனர்.