சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கோடை காலத்தை முன்னிட்டு கேம்ப் ஃபயருக்கு இரண்டு மாதம் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வனப்பகுதியில் தீ ஏற்படாதவாறு 5 ட்ரோன் கேமராக்கள் மூலம், தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.