அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத் திறனாளி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார். கீழராயபுரத்தை சேர்ந்த பி.எட். பட்டதாரி மாற்றுத்திறனாளி அரவிந்த்சாமியிடம், சேலத்தை சேர்ந்த திமுக பெண் பிரமுகர் வித்யா, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலியான அரசாணை கொடுத்து மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.