நான் முதல்வன்’ திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலமாக 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மைய துவக்க விழாவில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.