சென்னை கொடுங்கையூரில் குப்பைகள் தேங்குவதை தடுக்கும் வகையில், ஆயிரத்து 248 கோடி ரூபாய் மதிப்பில் 2 எரி உலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.கொடுங்கையூர் குப்பை கிடங்கில், 252 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்ற நடவடிக்கை எடுத்து வரும் மாநகராட்சி, குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் வாகன பயன்பாட்டிற்கான எரிவாயு தயாரிக்கும் இரண்டு எரி உலைகள் அமைக்க உள்ளது.இதில் முதற்கட்டமாக கட்டடம், சுற்றுச்சுவர் எரி உலைகள் போன்றவற்றிற்கு 848 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இரண்டாம் கட்ட எரி உலைகள் 400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.