காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து 2 பசுமாடுகள் மற்றும் ஒரு வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளியான பாக்கியராஜ் என்பவர் வளர்த்து வரும் இரண்டு கறவை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.