திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலகட்டையில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரத்தை சேர்ந்த சிறுமி டயானா, நடராஜபுரத்தை சேர்ந்த அக்கா தங்கையான பிரதிக் ஷா, நிதிக் ஷா, ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தொட்டியம் சென்று மீண்டும், வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஏழூப்பட்டி பாரதிபுரம் அருகே சாலையோரம் இருந்த பாலக்கட்டையில் இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், டயானா, நிதிக் ஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிறுமி பிரதிக் ஷாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.