கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே, கோழிப்பண்ணையில் தீவன மூட்டைகள் சரிந்து விழுந்ததில், 2 பெண் குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். கோபசந்திரம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலைப்பார்த்து வரும் பீகார் மாநில தொழிலாளியின் பிள்ளைகள் இருவரும் தீவன அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த விபரீதம் நடந்தது.