தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்கள் வெளுத்து வாங்கிய மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மணலூர் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத நிலையில், இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் வாய்க்கால் நிரம்பி, அதில் இருந்து வெளியேறிய தண்ணீர், 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிகளை சூழ்ந்தது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் வாய்க்காலை தூர்வாருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.