தமிழக வெற்றிக்கழகத்தின் எல்.இ.டி விளம்பர வாகனத்தின் செயல்பாட்டினை அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள வி.சாலை கிராமத்தில் தவெகவின் முதல் மாநில மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாநாடு தொடர்பாக மக்களை அழைப்பதற்காக எல்.இ.டி பதாகைகள் அடங்கிய விளம்பர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் இயக்கத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெக கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.