சென்னையில் பட்டப்பகலில் 19 வயது இளம்பெண்ணை காரில் கடத்திச் சென்ற, அவரது முன்னாள் காதலனை விக்கிரவாண்டி அருகே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சென்னை மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தேவஸ்ரீ என்பவரை, திருமுல்லைவாயலை சேர்ந்த அவரது முன்னாள் காதலனான ஷாம் சுந்தர் என்பவர், பெண் ஒருவர் மூலம் முகவரி கேட்பது போல காரில் கடத்திச் சென்றார். விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருவரையும் சுற்றிவளைத்து பிடித்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், நொளம்பூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். முகவரி கேட்பது போல் நடித்து கடத்தலுக்கு உதவிய பெண் உட்பட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.