திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியான 17 வயது சிறுமியை, 19 வயதான காதலன் AIR GUN-ஆல் சுட்டுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துவராபதியில் தனது சித்தப்பா வீட்டிற்கு வந்த செல்வம் என்பவரை சந்தித்த அவரது காதலியான 17 வயது சிறுமி, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிலிருந்த AIR GUN-ஐ எடுத்து செல்லம் சுட்டதில், சிறுமிக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், மன உளைச்சலில் செல்லவமும் எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.