1996-ம் ஆண்டு அதிமுக தோல்வியடைந்த பின் அக்கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி திமுகவில் சேர்ந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது என்று பாஜக மாநில துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதும் திமுகவுக்கு எதிராக மிகப் பெரிய அலை எழுந்துள்ளதாக கூறினார்.