தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தவும், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.