தேனி முல்லை பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1,800 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், சீலையம்பட்டியில் ஓடும் முல்லை பெரியாற்றில் தடுப்பணைகளை தாண்டி தண்ணீர் வேகமாக பாய்கிறது. மேலும், சுருளி ஆற்று தண்ணீரும், சுரங்கனார் அருவி தண்ணீரும் சேர்வதால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்கவோ, துணி துவைக்கவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட நிர்வாகம், கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன்பிடிக்கவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி சந்திப்பு..