கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 18 அடி உயர ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட 18 சித்தர்கள் சிலைகளின் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று வழிபாடு செய்தார்.ஒன்னிபாளையம் பகுதியில் உள்ள எல்லை கருப்பராயர் கோவிலில் புதிதாக அமைத்துள்ள முக்கோண வடிவ 18 அடி உயர கல்லில் 18 சித்தர்களை கொண்ட சிலைக்கு தொடர்ந்து 120 நாட்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை வழிபாடு செய்யப்பட்டது.